கோத்தா கெமுனிங் சட்டமன்ற அலுவலகம் ஏற்பாட்டில் கோத்தா கெமுனிங் வட்டாரத்தில் தந்தைமார்களுடன் இணைந்து பாவ்லிங் விளையாட்டுப் போட்டி நேற்று இரவு 7 மணி முதல் 10 மணி வரை சிறப்பாக நடைபெற்றது.
ஷா ஆலாம், செக்ஷன் 13, ஏயோன், ஆலாம் லேன்ஸ்ஸில் நடைபெற்ற இந்த நிகழ்விற்கு கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் சம்புநாதன் தலைமையேற்றார். தந்தையர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற இந்த பாவ்லிங் போட்டியானது, தந்தைமார்களின் தியாகத்தை நினைவுகூரும் வகையில் நடத்தப்பட்டது
கோத்தா கமுனிங் சட்டமன்றத் தொகுதியை சேர்ந்த 22 அணிகள், இந்த பாவ்லிங் போட்டியில் கலந்து கொண்டு நிகழ்விற்கு சிறப்பு சேர்த்ததாக சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் சம்புநாதன் விவரித்தார்.
இந்தப் போட்டியின் நிறைவில் வெற்றி பெற்ற அணிகள் மற்றும் சிறந்த வீரர்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் சம்புநாதன் பரிசுகளையும் பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கி சிறப்பித்தார். பங்கேற்பாளர்களின் நன்றிகளுடன், இத்தகைய நல்வாய்ப்பினை ஏற்படுத்தித் தந்த இந்நிகழ்வு இனிதே நிறைவுற்றது.














