பொருட்களின் விலையை நிர்ணயிப்பது மற்றும் விலையை கட்டுப்படுத்துவது அரசாங்கத்தின் பொறுப்பாக இருக்க வேண்டுமே தவிர அதனை தனியார் துறையினரிடம் ஒப்படைக்கக்கூடாது என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
அரிசி, கோதுமை,சமையல் எண்ணெய், பால்மாவு, சீனி போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலை கண்மூடித்தனமாக உயர்ந்து கொண்டு இருக்கும் வேளையில் பொருட்களின் விலையை நிர்ணயிக்கும் உரிமையை அரசாங்கமே தனது முழு கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்று அம்னோ இளைஞர் பிரிவு வலியுறுத்தியுள்ளது.
பொருட்களின் விலை உயர்வுக்கு காரணங்கள் தேவையில்லை. விலையை கட்டுப்படுத்துவதே அரசாங்கத்தின் தார்மீக கடமையாகவும்,கடப்பாடாகவும் இருக்க வேண்டும் என்று அம்னோ இளைஞர் பிரிவை சேர்ந்த டாக்டர் முகமது அக்மல் சலே கேட்டுக்கொண்டார்.








