Dec 18, 2025
Thisaigal NewsYouTube
சிலாங்கூர் வணிக வளாகங்களில் வளர்ப்புப் பிராணிகளைக் கொண்டு வரத் தடை இன்னும் நீடிக்கிறது
தற்போதைய செய்திகள்

சிலாங்கூர் வணிக வளாகங்களில் வளர்ப்புப் பிராணிகளைக் கொண்டு வரத் தடை இன்னும் நீடிக்கிறது

Share:

ஷா ஆலாம், டிசம்பர்.18-

சிலாங்கூரிலுள்ள வணிக வளாகங்களில் வளர்ப்புப் பிராணிகளைக் கொண்டு வர விதிக்கப்பட்டுள்ள தடையானது, இன்னும் அமலில் இருப்பதாக மாநில ஊராட்சி மற்றும் சுற்றுலா துறைகளுக்கான தலைவர் ங் சூ லிம் தெரிவித்துள்ளார்.

என்றாலும், சமூக நல்லிணக்கத்தைக் கருத்தில் கொண்டு, மாநில அரசாங்கம் அந்த தடை குறித்து மறு ஆய்வு செய்யும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சில நாடுகளில் வணிக வளாகங்களில் வளர்ப்புப் பிராணிகளைக் கொண்டு வருவது அனுமதிக்கப்பட்டிருக்கிறது என்றாலும் கூட, பல்லின மக்கள் வாழும் மலேசியாவிற்கு அது பொருந்துமா என்பது குறித்து யோசிக்க வேண்டும் என்றும் ங் சூ லிம் தெரிவித்துள்ளார்.

அண்மையில், கிள்ளான் பள்ளத்தாக்கில் உள்ள வணிக வளாகம் ஒன்று, வளர்ப்புப் பிராணிகளைக் கொண்டு வர அனுமதித்தது குறித்து, சமூக ஊடகங்களில் பல்வேறு கருத்துகள் எழுந்துள்ளன.

இந்நிலையில், அது குறித்து ங் சூ லிம்மிடம் கேள்வி எழுப்பப்பட்ட போது, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

Related News