கோலாலம்பூர், அக்டோபர்.08-
உள்ளூர் பல்கலைக்கழகம் ஒன்று, நாயைக் கொல்வதற்குப் பணம் கொடுத்து, நிறுவனம் ஒன்றின் சேவையைப் பயன்படுத்தியதாக மாது ஒருவர் செய்து கொண்ட போலீஸ் புகார் குறித்து தற்போது விசாரணை செய்யப்பட்டு வருவதாக செர்டாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமட் ஃபாரிட் அஹ்மாட் தெரிவித்தார்.
பல்கலைக்கழக நிர்வாகத்தின் போக்கு குறித்து தமது அதிருப்தியை வெளிப்படுத்திய செர்டாங்கைச் சேர்ந்த 51 வயது மாது, இவ்விவகாரம் தொடர்பாக கடந்த திங்கட்கிழமை போலீசில் புகார் செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இதன் தொடர்பில் 2015 ஆம் ஆண்டு வளர்ப்புப் பிராணி சட்டத்தின் கீழ் தற்போது பல்கலைக்கழகத்திற்கு எதிராக விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அவர் மேலும் கூறினார்.








