Sep 27, 2026
Thisaigal NewsYouTube
சமூக ஊடகங்களுக்கு 16 வயது வரம்பு
தற்போதைய செய்திகள்

சமூக ஊடகங்களுக்கு 16 வயது வரம்பு

Share:

மலேசியாவில் 16 வயதிற்குட்பட்ட சிறார்கள் சமூக ஊடகக் கணக்குகளைத் தொடங்குவதற்குத் தடை விதிக்கும் புதிய சட்டத்தை ஜூன் மாதம் முதல் அமல்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இதன்படி, சமூக ஊடகக் கணக்கு தொடங்க மைக்காட் வாயிலாக வயது சரிபார்ப்பு முறை கட்டாயமாக்கப்படவுள்ளது.

இணைய மிரட்டல் மற்றும் தேவையற்ற உள்ளடக்கங்களிலிருந்து சிறுவர்களைப் பாதுகாப்பதே இதன் நோக்கம் எனத் தகவல் தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்துள்ளார்.

எனினும், தொழில்நுட்ப ரீதியாக இதனைச் செயல்படுத்துவதில் உள்ள சவால்கள் குறித்து விவாதங்கள் எழுந்துள்ள நிலையில், பெற்றோர்களின் கண்காணிப்பும் டிஜிட்டல் கல்வியுமே இதற்குச் சிறந்த தீர்வாக அமையும் எனச் சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர்.

Related News