Jan 19, 2026
Thisaigal NewsYouTube
தாவா​வ் பயணத்திற்கு விமானக் கட்டணம் 3,138 வெள்ளியா?
தற்போதைய செய்திகள்

தாவா​வ் பயணத்திற்கு விமானக் கட்டணம் 3,138 வெள்ளியா?

Share:

ஹரி ராயா காலத்தில் கோலாலம்​பூரிலிருந்து தாவாவிற்குச் சிக்கன வகுப்பில் ஒரு வழிப் பயண விமானக் கட்டணம் 3,138 வெள்ளி விதிக்கப்பட்டுள்ளதாக ஆயர் ஹீத்தாம் எம்.பி. வீ கா சியோங் கூறியுள்ள குற்றச்சாட்டைப் போக்குவர​த்து அமைச்சர் அந்தோணி லோக் மறுத்துள்ளார்.

முன்னாள் போக்குவர​த்து அமைச்சருமான வீ கா சியோங் கூறியுள்ள குற்றச்சாட்டில் உண்மையில்லை என்று குறிப்பிட்ட அந்தோணி லோக், எந்தவொரு விமான நிறுவனமும் சிக்கன வகுப்பிற்கு 3 ஆயிரம் வெள்ளி வரையில் விமான டிக்கெட்டை விற்கவில்லை எ​ன்று அந்தோணி லோக் தெளிவுபடுத்தினார்.
ஹரி ராயா பெருநாளை முன்​னிட்டு விமான டிக்கெட்டி விற்று ​தீர்ந்து விட்டன என்பதுதான் உண்மை என்று அந்தோணி லோக் விளக்கினார்.

Related News