Jun 30, 2026
Thisaigal NewsYouTube
கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்
தற்போதைய செய்திகள்

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

Share:

'கார்ப்பரேட் மாஃபியா' முறைகேடுகள் தொடர்பாகப் புகார் கூறப்பட்டுள்ள அனைத்துத் தரப்பினரையும் பாரபட்சமின்றி விசாரிக்க வேண்டும் எனத் தாசேக் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ வான் சைபுல் வான் ஜான் வலியுறுத்தியுள்ளார்.

கார்ப்பரேட் ஊழல் தொடர்பாக முன்னாள் பி.கே.ஆர் துணைத் தலைவர் ரஃபிஸி ரம்லி வெளியிட்ட தகவல்கள் அதிர்ச்சியளிப்பதாகவும், இது அரசாங்கத்தின் நேர்மையைக் கேள்விக்குறியாக்குவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கு நெருக்கமானவர்கள் இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டிருப்பதாக எழுந்துள்ள புகார்களுக்கு அரசாங்கம் உடனடியாக விளக்கம் அளிக்க வேண்டும் என வான் சைபுல் கோரியுள்ளார்.

இந்த ஊழலில் முக்கிய நபராகக் கருதப்படும் விக்டர் சின் இருக்குமிடம் தங்களுக்குத் தெரியும் என உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் கூறியிருந்தும், அவரை ஏன் இன்னும் நாட்டிற்குக் கொண்டு வரவில்லை என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

முறைகேடுகளில் தொடர்புடைய நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனைத்து அரசு ஒப்பந்தங்களையும் விசாரணை முடியும் வரை உடனடியாக நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Related News

வர்த்தக வாகன ஓட்டுநர்களுக்கான மானிய விலை ஆரோக்கியப் பரிசோதனை நாளை முதல் தொடக்கம்

வர்த்தக வாகன ஓட்டுநர்களுக்கான மானிய விலை ஆரோக்கியப் பரிசோதனை நாளை முதல் தொடக்கம்

காஜாங் சூட்கேஸ் கொலை வழக்கு: பெண் தலையில் வெட்டப்பட்டு உயிரிழந்தது பிரேதப் பரிசோதனையில் அம்பலவமானது

காஜாங் சூட்கேஸ் கொலை வழக்கு: பெண் தலையில் வெட்டப்பட்டு உயிரிழந்தது பிரேதப் பரிசோதனையில் அம்பலவமானது

பள்ளி கட்டிடத்திலிருந்து மாணவன் விழுந்த சம்பவத்தில் குற்றவியல் பின்னணி இல்லை

பள்ளி கட்டிடத்திலிருந்து மாணவன் விழுந்த சம்பவத்தில் குற்றவியல் பின்னணி இல்லை

எரிபொருள் விலை 10 சென் குறைகிறது: நாளை முதல் புதிய விலை அமல்

எரிபொருள் விலை 10 சென் குறைகிறது: நாளை முதல் புதிய விலை அமல்

ஜோகூர் மாநிலத் தேர்தல்: "அரசியல் என்பது சேவைக்கானதே" – புக்கிட் பெர்மாய் வேட்பாளர் முகமது ஷஃப்வான் அனி உறுதி

ஜோகூர் மாநிலத் தேர்தல்: "அரசியல் என்பது சேவைக்கானதே" – புக்கிட் பெர்மாய் வேட்பாளர் முகமது ஷஃப்வான் அனி உறுதி

ஸ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தான மஹோற்சவம்: ஜூலை 4-இல் பால்குடம், தேர்த்திருவிழா; நாளை புஷ்பாஞ்சலி

ஸ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தான மஹோற்சவம்: ஜூலை 4-இல் பால்குடம், தேர்த்திருவிழா; நாளை புஷ்பாஞ்சலி