Jun 6, 2026
Thisaigal NewsYouTube
8 வயது மாணவியின் உயிரிழப்பிற்குக் காரணமான வேன் ஓட்டுநர் கைது
தற்போதைய செய்திகள்

8 வயது மாணவியின் உயிரிழப்பிற்குக் காரணமான வேன் ஓட்டுநர் கைது

Share:

பள்ளி வளாகத்தில் 8 வயது மாணவியின் உயிரிழப்பிற்குக் காரணமான வேன் ஓட்டுநரை போலீசார் கைது செய்துள்ளனர்.

நேற்று மதியம் 12.30 மணியளவில் நடந்த இச்சம்பவத்தையடுத்து, 60 வயதான வேன் ஓட்டுநர் உடனடியாக கைது செய்யப்பட்டதாக, பத்து பகாட் போலீஸ் தலைவர் ஷாருலானுவர் முஷாடத் அப்துல்லா சானி தெரிவித்துள்ளார்.

சம்பவத்தின் போது, பள்ளியின் பிரதான நுழைவாயிலில், அந்த வேன் வெளியேறும் போது, அதன் முன்பாக நடந்து சென்ற மாணவியை மோதியதாக ஷாருலானுவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விபத்தில் தலையிலும், உள்ளுறுப்புகளிலும் கடுமையான காயங்களுக்கு உள்ளான அந்த மாணவியை, பரித் சுலோங் சுகாதார நிலைய மருத்துவக் குழு பரிசோதித்த போது, சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்ததை உறுதிப்படுத்தினர்.

இந்நிலையில் இச்சம்பவமானது சாலைப் போக்குவரத்து சட்டம் பிரிவு 41(1) கீழ், கவனக்குறைவாக அல்லது ஆபத்தான வகையில் வாகனம் ஓட்டி மரணத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் விசாரிக்கப்பட்டு வருகின்றது.

Related News

காட்டில் உயிருக்குப் போராடிய 14 நாட்கள்: மீட்கப்பட்ட மலையேற்ற வீராங்கனை உருக்கம்

காட்டில் உயிருக்குப் போராடிய 14 நாட்கள்: மீட்கப்பட்ட மலையேற்ற வீராங்கனை உருக்கம்

நெகிரி செம்பிலான் பாரம்பரியச் சிக்கல்: நீதிமன்றம் செல்லாமல் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியும்

நெகிரி செம்பிலான் பாரம்பரியச் சிக்கல்: நீதிமன்றம் செல்லாமல் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியும்

ஜோகூர் தேர்தல்: எதிர்க்கட்சிகள் மோதலைத் தவிர்த்து ஒன்றிணைய வேண்டும் – மூடா அழைப்பு

ஜோகூர் தேர்தல்: எதிர்க்கட்சிகள் மோதலைத் தவிர்த்து ஒன்றிணைய வேண்டும் – மூடா அழைப்பு

சிரம்பான், தாமான் துவாங்கு ஜாஃபர் ஸ்ரீ மகா ராஜ ராஜேஸ்வரர் தேவஸ்தான மகா கும்பாபிஷேகம்

சிரம்பான், தாமான் துவாங்கு ஜாஃபர் ஸ்ரீ மகா ராஜ ராஜேஸ்வரர் தேவஸ்தான மகா கும்பாபிஷேகம்

தொழில்நுட்பக் கோளாறு: கேஎல்ஐஏ  ரயில் சேவைகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தம்

தொழில்நுட்பக் கோளாறு: கேஎல்ஐஏ ரயில் சேவைகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தம்

 14 நாட்களாகக் காட்டில் தவித்த பெண் மலையேறி 'ஜாஸ்லிந்தா' பூர்வக்குடி மக்களால் பத்திரமாக மீட்பு

14 நாட்களாகக் காட்டில் தவித்த பெண் மலையேறி 'ஜாஸ்லிந்தா' பூர்வக்குடி மக்களால் பத்திரமாக மீட்பு