Sep 26, 2026
Thisaigal NewsYouTube
சிறுவனுக்குப் பாலியல் கொடூரம்: சந்தேக நபரைத் தேடும் போலீஸ்!
தற்போதைய செய்திகள்

சிறுவனுக்குப் பாலியல் கொடூரம்: சந்தேக நபரைத் தேடும் போலீஸ்!

Share:

14 வயது சிறுவன் ஒருவனை அடுக்குமாடி குடியிருப்பில் அடைத்து வைத்து, பாலியல் சுரண்டல் செய்ததாக நம்பப்படும் நபரை போலீஸ் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

ஷா ஆலாம்- புக்கிட் கெமுனிங், செக்‌ஷன் 32-இல் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், தனது வீட்டிற்குப் பொருட்களைத் தூக்கிச் செல்ல உதவினால் மொபைல் போன் இன்டர்நெட் பேக்கேஜ்வுடன் வாங்கித் தருவதாகக் கூறி, அந்தச் சிறுவனை ஏமாற்றி, தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று கட்டிப்போட்டு இந்தக் கொடூரமான செயலைச் செய்துள்ளார்.

வீட்டில் தனியாக அடைத்து வைக்கப்பட்டிருந்தபோது, அந்தச் சிறுவன் தன்னை விடுவித்துக்கொண்டு ஜன்னல் வழியாக உதவி கேட்டு கத்தியதைத் தொடர்ந்து, அண்டை வீட்டார் அவனைக் காப்பாற்றி போலீசிடம் தகவல் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டு தேடப்பட்டு வருவதாக ஷா ஆலம் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ராம்சே எம்போல் தெரிவித்தார். மேலும் தங்களது குழந்தைகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்குமாறு அவர் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளார்.

Related News