Dec 3, 2025
Thisaigal NewsYouTube
சாரா திட்டத்தின் கீழ் போதுமான அத்தியாவசியப் பொருட்கள் உள்ளன: அரசாங்கம் உத்தரவாதம்
தற்போதைய செய்திகள்

சாரா திட்டத்தின் கீழ் போதுமான அத்தியாவசியப் பொருட்கள் உள்ளன: அரசாங்கம் உத்தரவாதம்

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.03-

சும்பாங்கான் ஆசாஸ் ரஹ்மா எனப்படும் சாரா உதவித் திட்டத்தின் கீழ் மக்கள் அத்தியாவசியப் பொருட்களை வாங்கிக் கொள்வதற்குப் போதுமான பொருட்கள் உள்ளன என்று அரசாங்கம் இன்று உத்தரவாதம் அளித்துள்ளது.

தலா 100 ரிங்கிட் வழங்கப்படும் சாரா உதவித் திட்டம் கடந்த ஆகஸ்ட் 31 ஆம் தேதி திறக்கப்பட்டது முதல் அத்திட்டத்தில் சேர்க்கத்தக்க அத்திவாசியப் பொருட்கள் உட்பட அடிப்படைப் பொருட்கள் போதுமான அளவில் உள்ளன. இதுவரை அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாடு ஏற்படவில்லை என்று அராசங்கப் பேச்சாளர் டத்தோ ஃபாமி ஃபாட்சீல் தெரிவித்துள்ளார்.

போதுமான பொருட்கள் விநியோகிக்கப்படுவதை உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சு உறுதிச் செய்துள்ளதாக தொடர்புத்துறை அமைச்சருமான டத்தோ ஃபாமி இன்று அறிவித்துள்ளார்.

அத்தியாவசியப் பொருட்கள் பற்றாக்குறை ஏற்படும் என்று மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று அவர் குறிப்பிட்டார்.

Related News