Jun 30, 2026
Thisaigal NewsYouTube
போலீசார் எட்டி உதைக்கவில்லை: தப்பியோட முயன்றபோது நிலைதடுமாறி விழுந்த மோட்டார் சைக்கிள் ஓட்டி
தற்போதைய செய்திகள்

போலீசார் எட்டி உதைக்கவில்லை: தப்பியோட முயன்றபோது நிலைதடுமாறி விழுந்த மோட்டார் சைக்கிள் ஓட்டி

Share:

பாசீர் கூடாங், கோத்தா மாசாய் பகுதியில் போலீஸ் அதிகாரி ஒருவர் மோட்டார் சைக்கிள் ஓட்டியை எட்டி உதைத்ததால் அவர் கீழே விழுந்ததாக சமூக வலைதளங்களில் பரவி வரும் குற்றச்சாட்டை ஜோகூர் போலீசார் திட்டவட்டமாக மறுத்துள்ளனர்.

நேற்று அதிகாலை 1.30 மணியளவில் 'ஓப் செலாமாட் 26' நடவடிக்கையின் போது, ஜாலான் புலாசான் பகுதியில் சட்டவிரோத மோட்டார் சைக்கிள் பந்தயம் குறித்து போலீசாருக்கு புகார் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு போலீசார் சென்றபோது, அங்கு குழுமியிருந்த இளைஞர்கள் பல திசைகளில் தப்பியோடினர்.

அப்போது ஒரு மோட்டார் சைக்கிள் போலீசாரை நோக்கி வேகமாக வந்து தப்பிக்க முயன்றது. போலீசார் அவரை நிறுத்த முயன்றபோது, சாலையோரத்திலிருந்த கல் மீது மோதி அந்த நபர் நிலைதடுமாறி விழுந்தார். இது குறித்து விளக்கமளித்த ஸ்ரீ ஆலாம் மாவட்ட இடைக்கால போலீஸ் தலைவர் ஜி. விக்டர், "சம்பந்தப்பட்ட நபர் தானாகவே நிலைதடுமாறி விழுந்தார் என்றும் போலீசார் அவரை எட்டி உதைக்கவில்லை" என்றும் உறுதிப்படுத்தினார்.

Related News

கோவிட் தடுப்பூசிக்கு எதிரான மேல்முறையீடு தள்ளுபடி: கூட்டரசு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

கோவிட் தடுப்பூசிக்கு எதிரான மேல்முறையீடு தள்ளுபடி: கூட்டரசு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

இணைய மோசடிகள் தொடர்பாக 1.65 லட்சத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு ; 45,000 பேர் கைது

இணைய மோசடிகள் தொடர்பாக 1.65 லட்சத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு ; 45,000 பேர் கைது

சரவாக் மாநிலத்திற்கான சிறப்பு மானியம் உயர்த்தப்படும் - அன்வார் அறிவிப்பு

சரவாக் மாநிலத்திற்கான சிறப்பு மானியம் உயர்த்தப்படும் - அன்வார் அறிவிப்பு

புத்ராஜெயா நிதி ஒதுக்கீட்டில் பாகுபாடு இல்லை / பெரும்பாலான மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்வதாக அன்வார் தகவல்

புத்ராஜெயா நிதி ஒதுக்கீட்டில் பாகுபாடு இல்லை / பெரும்பாலான மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்வதாக அன்வார் தகவல்

பெண் பயணிக்கு பாலியல் தொந்தரவு: இ-ஹெய்லிங் ஓட்டுநர் குற்றத்தை மறுத்து விசாரணை கோரினார்

பெண் பயணிக்கு பாலியல் தொந்தரவு: இ-ஹெய்லிங் ஓட்டுநர் குற்றத்தை மறுத்து விசாரணை கோரினார்

சையத் சித்திக் மீதான வழக்கில் ஜூலை 13-ஆம் தேதிக்கு தீர்ப்பு ஒத்தி வைப்பு

சையத் சித்திக் மீதான வழக்கில் ஜூலை 13-ஆம் தேதிக்கு தீர்ப்பு ஒத்தி வைப்பு