ஈப்போ, நவம்பர்.07-
இன்று வெள்ளிக்கிழமை மேன்மை தங்கிய பேரா சுல்தான், சுல்தான் நஸ்ரின் ஷாவின் 69 ஆவது பிறந்த தின விழாவை முன்னிட்டு, மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் அ. சிவநேசன், டர்ஜா டத்தோ படுகா மாஹ்கோத்தா பேரா எனும் அந்தஸ்தைத் தாங்கிய டத்தோ விருது வழங்கி சிறப்பு செய்யப்பட்டுள்ளார்.
பேரா மாநில ஜசெக.வில் டத்தோ விருதைப் பெற்ற இரண்டாவது நபராக சிவநேசன் திகழ்கிறார். இதற்கு முன்பு, பெருவாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ங்கே கூ ஹாம் இந்த உயரிய விருதைப் பெற்றார்.
பேரா மாநில மனித வளம், சுகாதாரம், ஒருமைப்பாடு மற்றும் இந்திய விவகாரங்களுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் என்ற முறையில் மாநில வளர்ச்சிக்கு சிவநேசன் ஆற்றிய பங்களிப்புக்காக அவருக்கு பேரா சுல்தான், இந்த உயரிய விருதை வழங்கி கெளரவித்துள்ளார்.








