Jul 29, 2026
Thisaigal NewsYouTube
நால்வரை போலீசார் தேடி வருகின்றனர்
தற்போதைய செய்திகள்

நால்வரை போலீசார் தேடி வருகின்றனர்

Share:

பெட்டாலிங் ஜெயா, ஜூலை 8 -

பெட்டாலிங் ஜெயாவில் உள்ள ஒரு வர்த்தகத் தளத்தின் கார் நிறுத்தும் இடத்தில் 12 லட்சம் வெள்ளி மதிப்புள்ள நகைகளுடன் காரில் வந்திறங்கிய ஆடவரை மடக்கி, அந்த நகைப் பேக்கைப் பறித்து, கொள்ளையிட்டு சென்றதாக நம்பப்படும் நால்வரை போலீசார் தேடி வருகின்றனர்.

இச்சம்பவம் கடந்த சனிக்கிழமை இரவு 7.40 மணியளவில் நிகழ்ந்ததாக பெட்டாலிங் ஜொய மாவட்ட போலீஸ் தலைவர் ஷாருல்நிஜாம் ஜாஃபர் தெரிவித்தார்.

சம்பவம் நிகழும் போது நகைப்பேக்குடன் வந்த அந்த ஆடவருடன் அவரின் தந்தை மற்றும் உறவுக்காரப் பெண் இருந்துள்ளனர்.

துப்பாக்கி முனையில் நிகழ்ந்த இந்த கொள்ளையில் அந்த மூவரும் எவ்வித காயத்திற்கும் ஆளாகிவில்லை. ஆனால், அந்த அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீளவில்லை என்று ஷாருல்நிஜாம் ஜாஃபர் குறிப்பிட்டார்.

இந்த கொள்ளையில் நான்கு நபர்கள் சம்பந்தப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது. அந்த வர்த்தகத் தளத்தின் முன்புறம் பொருத்தப்பட்டு இருந்த ரகசிய கேமராவை சோதனை செய்ததில், நகை கொண்டு வரப்பட்ட காருக்காக அந்த நான்கு கொள்ளையர்களும் கடையின் முன் காத்திருந்தது தெரியவந்துள்ளயதாக அவர் மேலும் கூறினார்.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

67.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்