கோத்தா கினபாலு, செப்டம்பர்.15-
கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனத்த மழையால் சபா உட்பட நாட்டில் பல்வேறு பகுதிகளில் வெள்ள நிலைமை மோசமடைகிறது. சபாவில் பெனாம்பாங், Beaufort, தாவாவ் ஆகிய பகுதிகளில் இன்று மாலை 6 மணி வரை 548 பேர், தங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
சபாவைத் தவிர பேரா, நெகிரி செம்பிலான் மற்றும் சிலாங்கூர் ஆகிய மாநிலங்களிலும் சில பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக இன்ஃபோ பென்சானா அகப்பக்கம் கூறுகிறது.
பேரா, முவாலிம் மாவட்டத்தில் 105 பேர், தங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டு நிவாரண மையத்தில் தஞ்சம் புகுந்துள்ளனர். நெகிரி செம்பிலான், போர்ட்டிக்சனில் 79 பேரும், சிலாங்கூர் உலு லங்காட்டில் 52 பேரும் நிவாரண மையங்களில் அடைக்கலம் புகுந்துள்ளனர் என்று அந்த அகப்பக்கம் தகவல் தெரிவித்துள்ளது.








