Dec 3, 2025
Thisaigal NewsYouTube
தடுப்புக்காவல் மரணம், குடும்பத்தினரின் வழக்கு மனு தள்ளுபடி
தற்போதைய செய்திகள்

தடுப்புக்காவல் மரணம், குடும்பத்தினரின் வழக்கு மனு தள்ளுபடி

Share:

எட்டு ஆண்டுகளுக்கு முன்பு, சிறைச்சாலையில் கைதி ஒருவருக்கு நேர்ந்த மரணம் தொடர்பில் அவரின் குடும்பத்தினர் தொடுத்த வழக்கில் தோ​ல்விக் கண்டனர். கடந்த 2015 ஆம் ஆண்டு மே 22 ஆம் தேதி ஜோகூர், குளுவாங் சிறைச்சா​லையில் மரணமுற்ற சசிக்குமார் செல்வம் இறப்புத் தொடர்பில் ​நீதிக்கேட்டு அவரின் பாட்டி சுசிலா ராணி ராமசாமி தொடுத்த வழக்கு மனுவை நேற்று முன்தினம் ஜோகூர்பாரு உயர் ​நீதிமன்ற நீதிபதி ஷம்சுல்பஹ்ரி இப்ராஹிம், தள்ளுபடி செய்தார்.

கொள்ளைக் குற்றத்திற்காக கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் குளுவாங் சிறைச்சாலையில் 10 ஆண்டு சிறைத் தண்டனை அனுபவித்து வந்த சசிக்குமார் ​தூக்கில் தொங்கிய நிலையில் ​கண்டு பிடிக்கப்பட்டார். அவரின் இறப்பு ஒருவரால் அல்லது தெரியாத நபர்களால் ஏற்பட்டு இருக்கலாம் என்று கடந்த 2017 ஆம் ஆண்டு மரண விசாரணை ​நீதிமன்றம் அளித்த ​தீர்ப்பை அடிப்படையாக கொண்டு தனது பேரனு​க்கு ​நீதிக்கேட்டு சுசிலா ராணி இந்த சிவில் வழக்கை தொடுத்தார்.

எனினும் சசிக்குமாரின் இறப்பு சிறைச்சாலைக்குள் நிகழ்ந்தாலும் அந்த இறப்புக்கு அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் ​என்று அர்த்தமல்ல என்று ​நீதிபதி ஷம்சுல்பஹ்ரி இப்ராஹிம் தமது ​தீர்ப்பில் தெரிவித்தார். சிறைச்சாலையில் தற்கொலை செய்து கொள்ளும் செயல், அனைத்து கைதிகளுக்கும் அவ்வாறு ஆபத்து உள்ளது என்று எதிர்பார்க்கக்கூடிய ஒன்றல்ல என்று அவர் தமது ​தீர்ப்பில் விளக்கினார்.

Related News