Oct 6, 2026
Thisaigal NewsYouTube

வணிக வளாகக் கழிவறையில் 18 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை: 71 வயது முதியவர் மீது குற்றச்சாட்டு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
வணிக வளாகக் கழிவறையில் 18 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை: 71 வயது முதியவர் மீது குற்றச்சாட்டு

பினாங்கு ஜார்ஜ்டவுனில் உள்ள வணிக வளாக பேரஙக்காடியின் இரண்டாவது மாடி ஆண்கள் கழிப்பறையில் 18 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து, இயற்கைக்கு மாறான பாலியல் உறவில் ஈடுபட்டதாக 71 வயது முதியவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

சுவா செங் செங் என்ற அந்த முதியவர், கடந்த அக்டோபர் 1ஆம் தேதி மாலை 4.30 மணியளவில் இக்குற்றத்தை புரிந்ததாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.

செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி அனுவாருல் ஹாகிம் அப்துல் முஏன் முன்னிலையில் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட போது, அந்த குற்றச்சாட்டை மறுத்து, முதியவர் விசாரணை கோரினார்.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடியபட்சம் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் கீழ் அவர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

அவருக்கு 20 ஆயிரம் ரிங்கிட் ஜாமீன் தொகை அனுமதிக்கப்பட்டதுடன் கடப்பிதழை நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறு நீதிபதி அனுவாருல் ஹாகிம் உத்தரவிட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →