Oct 16, 2026
Thisaigal NewsYouTube

20ஆம் ஆண்டு நிறைவு விழா

திசைகள் செய்திப்பிரிவு
Share:
20ஆம் ஆண்டு நிறைவு விழா

நவ. 24-

PUCHONG REFLEXOLOGY THERAPHY மையமும் பார்வையற்றோருக்கு அதரவளிபோம் இயக்கமும் இணைந்து நடத்திய 20ஆம் ஆண்டு நிறைவு விழாவில் 15 தொடக்கப் பள்ளி மாணவர்களுக்குப் பள்ளி சீருடையும் புத்தகப் பையும் உதவிகளாக வழங்கப்பட்டது. மேலும் 15 மாணவர்களுக்கு சீருடையும் புத்தகப்பையும் வழங்க மேற்கொண்டிருப்பதாக அவ்வியக்கத்தின் தலைவர் பாஸ்கரன் குறிப்பிட்டார்,

பார்வையற்றவரான அவர், தம்மால் இயன்ற இந்த சமூகப் பணியைக் கடந்த 10 ஆண்டுகாலமாக செய்து வருவதாகக் குறிப்பிட்டார். மேலும், குடும்பச் சூழலால் சிரமத்தை எர்ஹிர்நோக்கும் மேலும் ஐவருக்குத் தலா 1000 ரிங்கிட்டும் வழங்கப்பட்டது. குறிப்பாக, பார்வை குறைபாடு கொண்டவர்களுக்கு இவர் தம்மால் இயன்ற உதவிகளை ஒவ்வோர் ஆண்டும் வழங்கி வருவட்ஜாக பாஸ்கரன் குறிப்பிட்டார்.

பூச்சோங், LAMAN PUTERI 3வில் அமைந்துள்ள MPSJ பல்நோக்கு மண்டபத்தில், இந்த நிகழ்ச்சி மிகவும் விமரிசையாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு டத்தோ சுரேஷ், பூச்சோங்கைச் சேர்ந்த தொழில்முனைவர் இரத்தினம் ஆகியோர் சிறப்பு வருகை புரிந்தனர். பாஸ்கரன் தலைமைப் பொறுப்பை ஏற்றிருக்கும் அமைப்புக்கு டத்தோ சுரேஷ், ஐந்தாயிரம் ரிங்கிட் உதவி நிதியை வழங்கி இவர்களின் சமூகப் பணிக்கு ஆதரவளிப்பதாகத் தெரிவித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →