Oct 9, 2026
Thisaigal NewsYouTube

டத்தோ தி. முருகையா விபத்துக்குள்ளானார்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
டத்தோ தி. முருகையா விபத்துக்குள்ளானார்

கோலாலம்பூர், ஜூன்.23-

மஇகா உதவித் தலைவரும், முன்னாள் துணை அமைச்சருமான டத்தோ T. முருகையா விபத்துக்குள்ளானார். வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் பாங்கிக்கு அருகில் நேற்றிரவு 8.30 மணியளவில் அவர் விபத்துக்குள்ளானதாக ஊடகத் தகவல்கள் கூறுகின்றன.

ஜோகூர், பக்ரி மஇகா டிவிஷன் கூட்டத்தை தொடக்கி வைத்த பின்னர் கோலாலம்பூருக்கு வாகனத்தில் திரும்பிக் கொண்டு இருந்த போது இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.

முன்புறம் சென்று கொண்டிருந்த வாகனம் திடீரென்று நின்றதைத் தொடர்ந்து அந்த வாகனத்தை மோதுவதிலிருந்து தவிர்க்க முற்பட்ட போது, டத்தோ முருகையாவின் வாகனம் வேகக் கட்டுப்பாட்டை இழந்ததாகக் கூறப்படுகிறது.

எனினும் ஓட்டுநர், காரைப் கட்டுப்படுத்துவதில் வெற்றி கண்ட போதிலும் டத்தோ முருகையாவிற்கு கழுத்தின் பிடறியில் பலத்த அடி ஏற்பட்டது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →