Oct 16, 2026
Thisaigal NewsYouTube

ஒரு புதிய வழிகாட்டுதலை அறிமுகப்படுத்தியுள்ளது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
ஒரு புதிய வழிகாட்டுதலை அறிமுகப்படுத்தியுள்ளது

டிச. 8-

தகவல் தொடர்பு, பல்லூடகத் துறையில் தகவல் பாதுகாப்பையும் தொலைத்தொடர்பு இணைப்பு பாதுகாப்பையும் மேம்படுத்துவதற்காக ஒரு புதிய வழிகாட்டுதலை அறிமுகப்படுத்தியுள்ளது மலேசியத் தகவல் தொடர்பு, பல்லூடக ஆணையம்.

இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், இந்த வழிகாட்டுதல் தற்போது கட்டாயமில்லை என்றும், இது சிறந்த நடைமுறைகளுக்கான ஒரு கட்டமைப்பாக செயல்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இருப்பினும், இந்தத் துறையில் உள்ள நிறுவனங்கள் தங்கள் செயல்பாடுகளில் இந்த சிறந்த நடைமுறைகளைப் பின்பற்ற ஊக்குவிக்கப்படுகின்றன. இது இணையப் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கான ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகும் என்று அந்த அறிக்கை கூறுகிறது.

இந்த வழிகாட்டுதல் புதிய விதிகளைச் சேர்ப்பதை நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை மாறாக, இணைய ஆபத்துகளை நிர்வகித்தல், தரவு கசிவுகளை குறைத்தல், கட்டமைப்பை வலுப்படுத்துதல், பயனர்களை இணைய அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாத்தல் போன்றவற்றிற்கான சேவை வழங்குநர்களின் திறனை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த வழிகாட்டுதலை உருவாக்கும் போது, இணையப் பாதுகாப்பு நிறுவனங்கள், ஆலோசகர்கள், உரிமம் பெற்ற சேவை வழங்குநர்கள், அரசாங்க அமைப்புகள், ஒழுங்குமுறை நிறுவனங்கள், அரசு சாரா நிறுவனங்கள், கல்வியாளர்கள், SKMM கீழ் உள்ள மன்றங்கள் உள்ளிட்ட பல்வேறு பங்குதாரர்கள் தீவிரமாக ஈடுபடுத்தப்பட்டனர்.

பெறப்பட்ட கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் கவனமாக மதிப்பீடு செய்யப்பட்டு, பொருத்தமானவை இந்த வழிகாட்டுதலில் சேர்க்கப்பட்டுள்ளன" என்று SKMM கூறியது.

இந்த வழிகாட்டுதல் மலேசியாவின் இலக்கவியல் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் ஒரு முக்கிய படியாகக் கருதுகிறது, அனைவருக்கும் பாதுகாப்பான, நம்பகமான தொலைத்தொடர்பு கட்டமைப்பை உறுதி செய்கிறது மலேசியத் தகவல் தொடர்பு, பல்லூடக ஆணையம்

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →