Mar 23, 2026
Thisaigal NewsYouTube
இராணுவ ஹெலிகாப்டர் அவசரத் தரையிறக்கம்
தற்போதைய செய்திகள்

இராணுவ ஹெலிகாப்டர் அவசரத் தரையிறக்கம்

Share:

கோலாலம்பூர், ஜூன் 28-

ஜோகூர், க்ளுவாங், கெம் மஹ்கோத்தா, இராணுவ பயிற்சி முகாமில் இராணுவ ஹெலிகாப்படர் ஒன்று அவசரமாக தரையிறங்கியதில் மூன்று வீரர்கள் காயம் அடைந்தனர்.

இச்சம்பவம் இன்று அதிகாலை 1.35 மணியளவில் இராணுவ வீரர்களுக்கான அடிப்படை பயிற்சியின் போது நிகழ்ந்தது.

M81- 11 Agusta வகையை சேர்ந்த அந்த ஹெலிகாப்டரில் ஹெலிகாப்டர் பயிற்றுநர், பயிற்சி மாணவன் மற்றும் மற்றொரு சிப்பந்தி இருந்தனர். விலா எலும்பு முறிவு உட்பட அந்த மூவரும் உடலில் பல்வேறு காயங்களுக்கு ஆளானதாக தெரிவிக்கப்பட்டது.

அந்த மூன்று வீரர்களும்க்ளுவாங், என்சே பெசார் ஹஜ்ஜா கல்சோம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவத்தை தொடர்ந்து சம்பந்தப்பட்ட ஹெலிகாப்படர் மீண்டும் பரப்புவதற்கு தற்காலிக தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related News