சண்டாகான், ஜூலை.13-
சிறு, குறு, நடுத்தரத் தொழில்துறை சார்ந்த தொழில்முனைவோர் தங்கள் தயாரிப்புகளுக்கும் சேவைகளுக்கும் ஹலால் சான்றிதழ் பெறுமாறு தொழில்முனைவோர் மேம்பாடு, கூட்டுறவு அமைச்சர் டத்தோ எவோன் வலியுறுத்தியுள்ளார். ஹலால் சான்றிதழ் என்பது உள்நாட்டு, அனைத்துலகச் சந்தைகளில் நுழைவதற்கு சிறு, குறு, நடுத்தரத் தொழில்துறை நிறுவனங்களுக்குக் கூடுதல் மதிப்பை வழங்கும் என அவர் தெரிவித்தார்.
மலேசியாவில் வழங்கப்படும் ஹலால் சான்றிதழ் அனைத்துலக அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளதால், இது தொழில்முனைவோருக்கு ஒரு முக்கியச் சந்தைப்படுத்தல் அனுகூலமாக அமையும். ஹலால் தொழில் துறையில் தொழில்முனைவோர் மேம்பாட்டுக்கான மானியங்களையும் தங்கள் அமைச்சு வழங்குவதாக எவோன் மேலும் கூறினார்.








