Aug 6, 2026
Thisaigal NewsYouTube
முன்னாள் பேரரசியார் துங்கு நஜிஹா காலமானார்
தற்போதைய செய்திகள்

முன்னாள் பேரரசியார் துங்கு நஜிஹா காலமானார்

Share:

முன்னாள் பேரரசியாரும், நெகிரி செம்பிலான் மாநிலத்தின் முன்னாள் அரசியாருமான துங்கு நஜிஹா துங்கு பெசார் புர்ஹானுதீன் காலமானார். அவருக்கு வயது 100.

கார்டியாக் வாஸ்குலர் மையம் கோலாலம்பூர் மருத்துவமனையில் அனுதிக்கப்பட்டு இருந்த துங்கு நஜிஹா, இன்று காலை 6.33 மணியளவில் தமது இறுதி மூச்சை விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

துங்கு நஜிஹா, நாட்டின் பத்தாவது மாமன்னர் துவாங்கு ஜாஃபர் துவாங்கு அப்துல் ரஹ்மான் னின் துணைவியார் ஆவர். துங்கு நஜிஹா வின் மறைவைத் தொடர்ந்து துக்கம் அனுசரிக்கும் வகையில் நெகிரி செம்பிலான் மாநில கொடியை அரைக் கம்பத்தில் பறக்கவிடுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

துவாங்கு ஜாஃபர் துவாங்கு அப்துல் ரஹ்மான் நாட்டின் 10 ஆவது மாமன்னராக கடந்த 1994 ஆம் ஆண்டு முதல் 1999 ஆம் ஆண்டு வரையில் பதவி வகித்த வேளையில் துங்கு நஜிஹா நாட்டின் பேரரசியராக பொறுப்பு வகித்தார்.

நாட்டின் அரச பரிபாலனத்தில் கடந்த 1957 ஆம் ஆண்டு தொடங்கிய ஒன்பது ஆட்சியாளர்கள் மாமன்னர் பொறுப்பு வகிக்கும் சுழல் முறையில், முதலாவது சுற்று முடிவடைந்து , இரண்டாவது சுற்று 1994 ஆம் ஆண்டு தொடங்கிய போது துவாங்கு ஜாஃபர் - துங்கு நஜிஹா தம்பதியர் பத்தாவது மாமன்னராகவும், பேரரசியராகவும் பதவி வகித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130  லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130 லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி

கேளிக்கை மையங்களை இலக்காகக் கொண்ட போதைப்பொருள் கும்பல் வீழ்த்தப்பட்டது: தம்பதியர் உட்பட 7 பேர் கைது

கேளிக்கை மையங்களை இலக்காகக் கொண்ட போதைப்பொருள் கும்பல் வீழ்த்தப்பட்டது: தம்பதியர் உட்பட 7 பேர் கைது