கூலிம் பண்டார் பாரு மக்கள் நீதி கட்சியிலிருந்து முன்னால் தொகுதித் தலைவருமான தே லியான் ஓங் மற்றும் இன்னால் கட்சியின் துணைத் தலைவருமான சிவகுரு த/பெ சுப்பிரமணயம் அதிகாரப்பூர்வமாக மக்கள் நீதி கட்சியிலிருந்து வெளியேறுவத்தாக அவர்களின் முகநூலில் பதிவுச் செய்துள்ளனர்.
இதன் தொடர்பாக சிவகுரு சுப்பிரமணியம் அவரிடம் திசைகள் தொடர்ப்புக் கொண்டுப் பொழுது கூலிம் பண்டார் பாரு மக்கள் நீதி கட்சின் இன்னால் தொகுதித் தலைவரான இயோ கேங் சுவான் 2025 ஆம் ஆண்டின் தொகுதி ஆண்டுப் பொதுக் கூட்டத்தின் கணக்கறிக்கையில் தில்லு முல்லு இருப்பத்தாக சமீபத்தில் காவல்துறையில் புகார் செய்திருந்தார்.அதுமட்டுமின்றி அவரின் தலைமையில் இருக்கும் கூலிம் பண்டார் பாரு மக்கள் நீதி கட்சியில் பல உள்விவகார பிரச்சனைகள் இதுவரை எழுந்து வருவத்தாக சிவகுரு கூறினார்.
இப்புகாரின் அடிப்படையில் கூலிம் மாவட்ட காவல்துறையினர் 2 மணி நேரம் தே லியான் ஓங், முன்னால் தொகுதியின் செயலாளர் மற்றும் முன்னால் கணகறிக்காளர் ஆகியோரிடம் விசாரணை நடத்தியத்திவுள்ளனர். இத்தொகுதில் ஓராண்டு ஆண்டுக் காலமாக தொகுதி தலைவரான இயோ கேங் சுவான் அவரால் பல பிரச்சனை எழுந்து வந்தன.
மேலும், கூலிம் பண்டார் பாரு மக்கள் நீதி கட்சியின் பிரச்சனைகளை தேசிய மக்கள் நீதி கட்சி தலையிட வேண்டும் என்று பல முறை கட்சியின் பொதுச் செயலாரான ஃபுஜியா சாலேக் கடிதங்கள் அனுப்பிவிட்டோம் ஆனால் இதுவரை எவ்விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்று சிவகுரு குறிபிட்டார்.
2018 ஆம் ஆண்டிலிருந்து 2025 ஆம் ஆண்டுவரை தே லியான் ஓங் கூலிம் பண்டார் பாருவின் மக்கள் நீதி கட்சியின் தலைவராக இருந்துள்ளார். அவர் 2013 ஆம் ஆண்டிலிருந்து மக்கள் நீதி கட்சியில் 13 ஆண்டுக்களாக உறுப்பினராக இருந்துள்ளார். தான் 2000 ஆம் ஆண்டிலிருந்து 2026 ஆம் ஆண்டு வரை 26 ஆண்டுக் காலங்கள் இக்கட்சியின் உறுப்பினராவேன் என்றார் சிவகுரு.
ஆகவே, ஒரு தொகுதியிலோ அல்லது கட்சியிலோ பிரச்சனைகள் எழும்பொழுது அதற்குச் சரியான தீர்வினை வழங்க வேண்டியது தேசியத்தின் கடமையாகும்.ஒவ்வொரு கட்சியின் முதன்மை நோக்கமே மக்களுக்குச் சேவைச் செய்வத்தாகும் அப்படியிருக்கும் பட்சத்தில் அரசாங்கமாக இருக்கும் மக்கள் நீதி கட்சி ஒரு தொகுதியில் செயலவை உறுப்பினர்கள் பிரச்சனையால் எவ்விதமான நடவடிக்கையும் செய்ய முடியாமல் சும்மாக இருப்பத்தற்கு பதிலாக பதவியிலிருந்தும் கட்சியிலிருந்து விலகுவதே சரியான முடிவாகும் என்று தே லியான் ஓங் மற்றும் சிவகுரு திசைகளிடம் தெரிவித்தனர்.
மக்கள் நீதி கட்சியின் உறுப்பினராக விலகிறோம் ஆனால் இதுவரை எந்த கட்சியிலும் இணைவத்தற்கான முடிவு எடுக்கப்படவில்லை என்றனர்.










