SRC International வழக்கில் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கிற்கு 12 ஆண்டு சிறைத் தண்டனையும், அபராதத்தையும் விதித்த நீதிபதி முகமட் நஸ்லான் முகமட் கஸாலிக்கு எதிராக கூறப்படும் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் முடிவை கடித வாயிலாக , நஜீப் வழக்கறிஞர்களுக்குத் தெரியப்படுத்தியிருக்கும் சட்டத்துறை அமைச்சர் அஸாலினா ஓத்மான் சாயிட், அது குறித்து அமைச்சரவையில் கலந்து ஆலோசிக்கவில்லை என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்துள்ளார்.
எனினும் இந்த விவகாரத்தை அமைச்சர் அஸாலினா ஓத்மான், இந்த வாரம் அமைச்சரவைக் கூட்டதில் கொண்டு வருவாரா? என்பது குறித்து உறுதியாக தெரியவில்லை என்று அந்தோணி லோக் குறிப்பிட்டார்.
நீதிபதி முகமட் நஸ்லான், நீதித்துறை நன்னெறி கோட்பாட்டை மீறியுள்ளார் என்று ஊழல் தடுப்பு ஆணையம் வழங்கிய அறிக்கையின் முடிவை, ரகசியம் காக்கப்படாமல், நஜீப்பின் வழக்கறிஞர் முகமட் ஷாபி அப்துல்லாவிற்குக் கடித வாயிலாக தெரியப்படுத்தியிருப்பது குறித்து அமைச்சர் அஸாலினா பலத்த கண்டனத்திற்கு ஆளாகி வருகிறார்.
இந்நிலையில் நஜீப்பின் வழக்கறிஞருக்கு இந்த விவகாரத்தைத் தெரியப்படுத்துவதற்கு முன்னதாக இது குறித்து அமைச்சரவையில் அஸாலினா விவாதித்துள்ளாரா? என்ற கேள்விக்கு அந்தோணி லோக் மேற்கண்டவாறு பதில் அளித்துள்ளார்.

Related News

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

ஜனவரி முதல் சரவாக்கில் ஏர் போர்னியோ-வின் புதிய விமானச் சேவை


