Dec 2, 2025
Thisaigal NewsYouTube
30 வயது இந்தியப் பிரஜை கைது
தற்போதைய செய்திகள்

30 வயது இந்தியப் பிரஜை கைது

Share:

பொறாமையின் காரணமாக தமது காதலியை கத்தியால் குத்தி உடலில் 18 இடங்களில் காயம் விளைவித்தப்பின்னர் ரயில் பாதையில் அத்துமீறி நுழைந்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட ஓர் இந்தியப் பிரஜையை உதவிப் போலீசார் வளைத்துப் பிடித்தர்.

இச்சம்பவம் சாலாக் சவுத், Express Rail Link தண்டவாளப்பகுதியில் நிகழ்ந்தது. முன்னதாக 30 வயதுடைய அந்த ஆடவர், கிளானா ஜெயாவில் உள்ள ஓர் அடுக்குமாடி வீட்டில் தமது காதலியான 40 வயது இந்தியப் பிரஜையை காயப்படுத்திவிட்டு அங்கிருந்து தப்பித்து, ரயிலில் மோதி தற்கொலை முயற்சியில் ஈடுபட முனைந்தாக பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் எசிபி ஃபக்ருடின் அப்துல் ஹமிட் தெரிவித்தார்.

தமது காதலி மற்றொரு ஆடவருடன் அந்தரங்க தொடர்பு வைத்துள்ளதாக சந்தேகித்த அந்த ஆடவர், அப்பெண்ணை கத்தியால் பலமுறை குத்தியுள்ளார். அந்தப் பெண் தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எசிபி ஃபக்ருடின் குறிப்பிட்டார்.

Related News