Sep 26, 2026
Thisaigal NewsYouTube
தனிநபர் தினசரி நீர் பயன்பாட்டை 250 லிட்டராகக் குறைக்க இலக்கு: பினாங்கு நீர் வழங்கல் கழகம் திட்டம் !
தற்போதைய செய்திகள்

தனிநபர் தினசரி நீர் பயன்பாட்டை 250 லிட்டராகக் குறைக்க இலக்கு: பினாங்கு நீர் வழங்கல் கழகம் திட்டம் !

Share:

ஒட்டுமொத்த பினாங்கிலும் தீவிரப்படுத்தப்பட்டு வரும் நீர்ச் சேமிப்பு பிரச்சாரத்தின் மூலம், இந்த ஆண்டில் தனிநபர் உள்நாட்டு நீர் பயன்பாட்டை ஒரு நாளைக்கு 250 லிட்டராகக் குறைக்க பினாங்கு நீர் வழங்கல் கழகம் (PBAPP) இலக்கு நிர்ணயித்துள்ளது.

பினாங்கில் தனிநபர் உள்நாட்டு நீர் பயன்பாடு 2022-இல் 307 லிட்டராகவும், 2023-இல் 308 லிட்டராகவும் இருந்த வேளையில், பல்வேறு தரப்பினரின் விழிப்புணர்வு முயற்சிகளால் கடந்த ஆண்டு அது 261 லிட்டராக அதிரடியாகக் குறைந்துள்ளது என்று அதன் தலைமை நிர்வாக அதிகாரி டத்தோ டத்தோ இர். கே. பத்மநாதன் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், பினாங்கின் இந்த நுகர்வு விகிதம் தேசிய சராசரியான 225 லிட்டரை விட இன்னும் அதிகமாகவே கருதப்படுகிறது என்று உலக நீர் தின விழாவில் அவர் குறிப்பிட்டார். கடந்த ஆண்டு ஒட்டுமொத்த நீர் பயன்பாட்டில் பாதியற்கும் மேல், அதாவது ஒரு நாளைக்கு 482 மில்லியன் லிட்டர் உள்நாட்டுத் துறையிலிருந்தே பயன்படுத்தப்பட்டுள்ளதால், நீர் விநியோகம் சீராக இருப்பதை உறுதி செய்ய நுகர்வோரின் ஒத்துழைப்பு மிகவும் முக்கியமானது என்றும் அவர் வலியுறுத்தினார்.

Related News