கோலாலம்பூர், டிசம்பர்.08-
மலாயன் ரயில்வே பெர்ஹாட்டுக்குச் சொந்தமான ETS மின்சார ரயில் சேவை, கோலாலம்பூரிலிருந்து ஜோகூர் பாரு சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வரும் டிசம்பர் 12 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாகத் தொடங்குகிறது.
ETS ரயில் சேவையின் அறிமுகத்தையொட்டி பயணிகளுக்கு மலாயன் ரயில்வே பெர்ஹாட் 30 விழுக்காடு கட்டணக் கழிவை வழங்குவதாக இன்று அறிவித்துள்ளது.
KL Sentral – JB Sentral – KL Sentral வழித்தடத்திற்கான இந்தச் சிறப்புக் கட்டணக் கழிவு, டிசம்பர் 12 ஆம் தேதி தொடங்கி வரும் ஜனவரி 11 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று அது அறிவித்துள்ளது.
நிபந்தனைகளுக்கு உட்பட்டு 5 ஆயிரம் இருக்கைகள் இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளதாக அது குறிப்பிட்டுள்ளது.








