Sep 18, 2026
Thisaigal NewsYouTube
நஜிப்பின் வீட்டு முன் குவிந்த செய்தியாளர்கள்… பரபரக்கும் ஜாலான் டூத்தா
தற்போதைய செய்திகள்

நஜிப்பின் வீட்டு முன் குவிந்த செய்தியாளர்கள்… பரபரக்கும் ஜாலான் டூத்தா

Share:

முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் ரஸாக்கிற்கு மீதமுள்ள சிறைத் தண்டனையை வீட்டுக் காவலில் அனுபவிக்க அனுமதி வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, கோலாலம்பூர், ஜாலான் டூத்தாவில் உள்ள அவரது இல்லத்தின் முன்பு உள்ளூர் மற்றும் அனைத்துலக ஊடகங்களைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட செய்தியாளர்கள் இன்று குவிந்துள்ளனர்.

நஜிப்பின் இல்லத்திற்குள் அல்லது வெளியே வாகனங்கள் உள்ளிட்ட எந்தவிதமான நடமாட்டமும் இதுவரை தென்படவில்லை. இதனால், அவரது அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து செய்தியாளர்கள் தொடர்ந்து காத்திருக்கின்றனர்.

அவரது ஆதரவாளர்கள் எவரும் இதுவரை அங்கு காணப்படவில்லை. அதேவேளை, பாதுகாப்புக்காக பல காவல்துறை வாகனங்கள் அந்தப் பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளன.

வீட்டுக் காவல் தொடர்பான ஆகக் கடைசியான நிலவரத்தைப் பதிவு செய்வதற்காக செய்தியாளர்கள் தொடர்ந்து அங்கு காத்திருக்கும் நிலையில், நஜிப் எப்போது சிறையை விட்டு வெளியே வருவார் அல்லது அடுத்ததாக என்ன நடவடிக்கை இடம் பெறும் என்பதே தற்போது அங்கு நிலவும் எதிர்பார்ப்பாக உள்ளது.

Related News