கோலாலம்பூர், ஜனவரி.05-
மலேசிய வருமான வரி வாரியமான எல்எச்டிஎன் LHDN, வருமான வரி செலுத்தும் தனிநபர்களுக்கான CP500 எனும் தவணை முறையில் வரி செலுத்துவது தொடர்பான நிலுவைக் கட்டணங்கள் குறித்து இன்று முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
2026-ஆம் ஆண்டிற்கான வருமான வரி மதிப்பீட்டின் போது, CP500 நோட்டீஸ் அடிப்படையில் வரி செலுத்தும் தனிநபர்களுக்கு, நிலுவைத் தொகையைச் செலுத்துவதில் ஏற்படும் தாமதத்திற்காக எந்தவித அபராதமும் விதிக்கப்படாது என்று LHDN அறிவித்துள்ளது.
LHDN- னின் இந்த அறிவிப்பு, வணிக வருமானம், வாடகை வருமானம் அல்லது ராயல்டி போன்ற மாதச் சம்பளம் அல்லாத பிற வழிகளில் வருமானம் ஈட்டும் தனிநபர்களுக்கு பெரிய நிம்மதியைத் தந்துள்ளது.
வரி செலுத்துவோர் மீதான நிதிச் சுமையைக் குறைக்கவும், நாட்டின் தற்போதைய பொருளாதாரச் சீர்திருத்தங்களுக்கு இணங்க மக்கள் தங்களின் வரி விவரங்களைச் சரியாகத் தாக்கல் செய்வதை ஊக்குவிக்கவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக LHDN ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.








