நேற்ற்ய் ஈப்போ, கம்போங் காஜா. ஜாலான் குவாலா பாரிட் கம்போங் பாசிர் ஜென்டெரிஸ்க்கு அருகில் உள்ள வடிகாலில் மீன்பிடிக்கச் சென்ற ஆடவர் ஒருவர் இன்று காலை 10.57 மணி அளவில் சடலமாக மீட்கப்பட்டார்.
முன்னதாக, காணாமல் போனதாக நம்பப்படும் 36 வயது மிக்க முஹமாட் அஸ்ருல் எஃபென்டி ஷசாலி எனும் ஆடவரின் சடலம் என உறுதிப்படுத்தப்பட்டதாக பேரா மாநில தீயணைப்பு - மீட்புப் படையின் உதவி இயக்குநர் சபரொட்சி நோர் அஹ்மாட் குறிப்பிட்டார்.
அவர் மீன் பிடித்த இடத்திலிருந்து 2.3 கிலோ மீட்டர் தூரத்தில் உள ஒரு பாலத்தின் அருகில் அந்த ஆடவரின் சடலத்தைப் பொதுமக்கள் கண்டதாக சபரொட்சி கூறினார்.
அடுத்தக்கட்ட நடவடிக்கைக்காக அந்தச் சடலம் காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.








