Mar 17, 2026
Thisaigal NewsYouTube
மூன்று கணக்குகள் அடையாளம் காணப்பட்டுள்ளது
தற்போதைய செய்திகள்

மூன்று கணக்குகள் அடையாளம் காணப்பட்டுள்ளது

Share:

கிளந்தான் மாநில ஷரியா குற்றவியல் சட்டத்தின் 16 சட்ட விதிகளை அகற்றுவதில் வெற்றி கண்டுள்ள ஒரு பெண் வழக்கறிஞரான Nik Elin Zurina Nik Abdul Rashid –க்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படும் தனிநபர்களின் மூன்று சமூக வலைத்தள கணக்குகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கோலாலம்பூர் போலீஸ் தலைவர் Datuk Allaudeen Abdul Majid தெரிவித்துள்ளார்.

கூட்டரசு நீதிமன்றத்தின் தீர்ப்பில் அதிருப்தியுற்று, சம்பந்தப்பட்ட பெண்மணிக்கு எதிராக கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக கூறப்படும் புகார் தொடர் தொடர்பில் இது வரையில் மூன்று விசாரணை அறிக்கைகள் திறக்கப்பட்டுள்ளதாக Datuk Allaudeen குறிப்பிட்டார்.

இதில் ஒரு விசாரணை அறிக்கை முற்றுப்பெற்று, அடுத்த கட்ட நடவடிக்கைக்காக துணை பப்ளிக் பிராசிகியூட்டர் அலுவலகத்தற்கு அனுப்பப்பட்டுள்ளது. இன்னும் இரண்டு அறிக்கைகள் விரைவில் தயாரிக்கப்பட்டு விடும் என்று Datuk Allaudeen தெரிவித்தார்.

அரசியலமைப்புச் சட்டம் தொடர்பான வழக்கில் தாம் வெற்றிப்பெற்றதை தொடர்ந்து தனது கழுத்து அறுக்கப்படும் என்று சம்பந்தப்பட்ட நபர்கள் கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக அப் பெண்மணி போலீசில் புகார் செய்துள்ளார்.

Related News