Dec 4, 2025
Thisaigal NewsYouTube
போலி விசா: ஆப்கானிஸ்தான் பிரஜைகள் நாட்டிற்குள் நுழைவது தடுக்கப்பட்டது
தற்போதைய செய்திகள்

போலி விசா: ஆப்கானிஸ்தான் பிரஜைகள் நாட்டிற்குள் நுழைவது தடுக்கப்பட்டது

Share:

சிப்பாங், ஜூலை.29-

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு ஆப்கானிஸ்தான் பிரஜைகள், போலி விசாவைப் பயன்படுத்தி, மலேசியாவிற்குள் நுழையும் முயற்சியை மலேசிய எல்லைப் பாதுகாப்பு, கட்டுப்பாட்டு ஏஜென்சி வெற்றிகரமாக முறியடித்துள்ளது.

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் கேஎல்ஐஏ ஒன்றில் அந்த ஏஜென்சி மேற்கொண்ட திடீர் சோதனையில் அந்த நான்கு ஆப்கானிஸ்தான் பிரஜைகளும் பிடிபட்டனர். சோதனைக்கு உட்படுத்தப்பட்ட மொத்தம் 132 அந்நியப் பிரஜைகளில், இந்த நான்கு ஆப்கானிஸ்தான் பிரஜைகளும் அடங்குவர்.

கேஎல்ஐஏ ஒன்றை வந்தடைந்தப் பின்னர் குடிநுழைவு முகப்பிடங்களுக்குச் செல்லாமல் விமான நிலையத்தின் பயணிகள் வந்தடையும் பகுதியிலேயே உலவிக் கொண்டிருந்த அந்த நான்கு ஆப்கானிஸ்தான் பிரஜைகளும் இறுதியில் பிடிபட்டதாக அந்த ஏஜென்சி தெரிவித்துள்ளது.

Related News