Jun 9, 2026
Thisaigal NewsYouTube
மற்றவர்களின் 'மைகாட்டை' பயன்படுத்தினால் 3 ஆண்டுகள் சிறை, 20 ஆயிரம் அபராதம் - புடி95 திட்டம் குறித்து அரசாங்கம் எச்சரிக்கை
தற்போதைய செய்திகள்

மற்றவர்களின் 'மைகாட்டை' பயன்படுத்தினால் 3 ஆண்டுகள் சிறை, 20 ஆயிரம் அபராதம் - புடி95 திட்டம் குறித்து அரசாங்கம் எச்சரிக்கை

Share:

ஆர்.ஓ.என்95 பெட்ரோல் மானியத்தை பெறுவதற்காக மற்றவர்களின் மைகாட்டை அட்டையைப் பயன்படுத்துவது சட்டவிரோதம் என நிதி அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.

தேசிய பதிவுச் சட்ட விதிமுறை 1990, பிரிவு 25-இன் கீழ், சட்டப்பூர்வ அனுமதி இன்றி மற்றொருவரின் மைகாட்டை-ஐ பயன்படுத்துவது அல்லது வைத்திருப்பது கடுமையான குற்றமாகும் என்றும் தெரிவித்துள்ளது.

இக்குற்றத்தைப் புரிவோருக்கு, 20 ஆயிரம் ரிங்கிட் அபராதம், அதிகபட்சமாக மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை அல்லது இரண்டும் விதிக்க சட்டத்தில் இடம் உள்ளதாக இன்று நிதியமைச்சு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

மேலும், பெட்ரோல் நிலையங்களில் புடி95 திட்டத்தின் கீழ் நடைபெறும் பரிவர்த்தனைகளில் மைகாட்டை சரிபார்ப்பு நடைமுறைகள் கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என்றும் அமைச்சு வலியுறுத்தியுள்ளது.

Related News