Sep 26, 2026
Thisaigal NewsYouTube
மாணவனை பலாத்காரம் புரிந்ததாக வழக்கு : ஆசிரியை விடுவிக்கப்பட்டார்
தற்போதைய செய்திகள்

மாணவனை பலாத்காரம் புரிந்ததாக வழக்கு : ஆசிரியை விடுவிக்கப்பட்டார்

Share:

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு 15 வயது மாணவன் ஒருவனை பாலியல் பலாத்காரம் புரிந்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட 32 வயது ஆசிரியை அக்குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

அந்த ஆசிரியையுக்கு எதிராக கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை நிரூபிக்க புரோசிகியூஷன் தரப்பினர் தவறியதைத் தொடர்ந்து அவர் விடுவிக்கப்படுவதாக கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிபதி தஸ்னிம் அபு பக்கர் தமது தீர்ப்பில் தெரிவித்தார்.

கடந்த 2023-ஆம் ஆண்டு ஜூன் 23-ஆம் தேதி கோலாலம்பூர், ஜாலான் டத்தோ அப்துல் மாலிக் மற்றும் ஜாலான் ராஜா மூடா அப்துல் அஜீஸ் பேருந்து நிறுத்தத்தில் உள்ள ஒரு காரில் அந்த மாணவனை பாலியல் பலாத்காரம் புரிந்து அத்துமீறி நடந்ததாக அந்த மாது மீது இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன.

2017-ஆம் ஆண்டு குழந்தைகளுக்கான பாலியல் குற்றச் சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட இந்த வழக்கில், அரசுத் தரப்பு போதுமான முகாந்திரங்கள் நிரூபிக்கப்படாததால் அந்த ஆசிரியை குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிப்பதாக நீதிபதி தஸ்னிம் தமது தீர்ப்பில் தெரிவித்தார்.

Related News