நடப்பு அரசாங்கத்தை ஆதரித்தால் பதவி, குத்தகைத் திட்டங்கள் கைமாறாக வழங்கப்படும் என்ற தாங்கள் பேரம் பேசப்பட்டதாக கூறும் நாடாமன்ற உறுப்பினர்கள், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் மினால் விசாரணை செய்யப்பட வேண்டும் என்று சட்டத்துறை துணை அமைச்சர் ராம் கர்ப்பால் சிங் கேட்டுக்கொண்டார்.
தாங்கள் பணம் சம்பாதிப்பதற்கு குத்தகைத் திட்டமும், பதவியும் வழங்கப்படுவதாக அண்மையில் பெரிக்காத்தான் நேஷனலை சேர்ந்த இரு எம்.பி.க்கள் அறிக்கை வெளியிட்டு இருப்பதை எஸ்பிஆர்எம் கடுமையாக கருத வேண்டும் என்று ராம் கர்ப்பால் வலியுறுத்தினார்.
எதிர்க்கட்சியை சேர்ந்த அந்த இரு எம்.பி.க்களின் குற்றச்சாட்டில் எந்த அளவிற்கு உண்மை என்பது குறித்து விசாரணை செய்யப்பட வேண்டும் என்று எஸ்பிஆர்எம் -மை ராம் கர்ப்பால் கேட்டுக்கொண்டார்.








