Dec 2, 2025
Thisaigal NewsYouTube
புதிய வெகுமதி திட்டத்தை வழங்கவிருக்கிறது ஜொகூர்
தற்போதைய செய்திகள்

புதிய வெகுமதி திட்டத்தை வழங்கவிருக்கிறது ஜொகூர்

Share:

ஜொகூர் மாநிலத்தில் பணியாற்றும் மருத்துவர்களுக்கும், தாதியர்களுக்கும், புதிய வெகுமதி திட்டங்களையும் சம்பள விகிதங்களையும் வழங்க சுகாதார அமைச்சகமும், பொது சேவைத் துறையும் முன்வர வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஜோகூரில் உள்ள மருத்துவர்கள் மற்றும் தாதியர்கள் மற்ற இடத்திற்கு மாற்றல் ஆகி செல்வதனால், சுல்தானா அமினா மருத்துவமனை, சுல்தான் இஸ்மாயில் மருத்துவமனை ஆகியவை மருத்துவர்கள் மற்றும் தாதியர்களின் பற்றாக்குறையை எதிர்நோக்கி வருவதாக ஜோகூர் சுகாதாரம் மற்றும் ஒற்றுமைக் குழுவின் தலைவர் லிங் தியான் சூன் தெரிவித்தார்.

இந்த பற்றாக்குறையைச் சரிச்செய்ய, ஜொகூர் மாநிலத்தில் பணியாற்றும் அனைத்து மருத்துவர்களுக்கும் தாதியர்களுக்கும் ஏற்ற வெகுமதி திட்டத்தையும் சம்பள உயர்வையும், சுகாதார அமைச்சு வழங்க வேண்டும் என்று லிங் தியான் சூன் பரிந்துரைத்தார்.

Related News