காஜாங், ஆகஸ்ட்.02-
சிலாங்கூர், காஜாங்கில் உள்ள ஒரு பேரங்காடியில் சக மாணவன் ஒருவன், கண்மூடித்தனமாகத் தாக்கப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட நான்கு மாணவர்கள் இரண்டு நாள் தடுப்புக் காவலுக்குப் பிறகு விடுவிக்கப்பட்டுள்ளனர் என்று போலீசார் தெரிவித்தனர்.
காஜாங்கில் உள்ள ஓர் இடைநிலைப் பள்ளியைச் சேர்ந்த 13 வயதுடைய 4 மாணவர்களுக்கு எதிராகப் பெறப்பட்ட தடுப்புக் காவல் உத்தரவு இன்று முடிவடைந்ததாக காஜாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி நாஸ்ரோன் யுசோஃப் தெரிவித்தார்.
இதுவரையில் அந்த 4 மாணவர்களிடம் வாக்குமூலம் மட்டுமே பதிவு செய்துள்ளோம். மாணவர்களிடையே ஏற்பட்ட தவறானப் புரிதல் காரணமாக இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது என்பது பூர்வாங்க விசாரணையில் தெரிய வந்துள்ளதாக ஏசிபி நாஸ்ரோன் குறிப்பிட்டார்.








