காஜாங், ஆகஸ்ட்.23-
நாட்டில் பிரசித்தி பெற்ற காஜாங் சாத்தே, சிலாங்கூர் மாநிலத்தின் பாரம்பரிய உணவாக இன்று பிரகடனப்படுத்தப்பட்டது.
காஜாங் சாத்தே ஏற்கனவே அடையாள உணவுகளில் ஒன்றாக சிலாங்கூர் மாநில அரசு அங்கீகரித்து இருந்தது. இது இனி சிலாங்கூர் மாநிலத்தின் பாரம்பரிய உணவாக அரசு பதிவேட்டில் இடம் பெறுகிறது.
காஜாங் சாத்தேவின் இந்தப் பிரகடனத்தை சிலாங்கூர் மாநில அரசியார் தெங்கு பெர்மைசூரி நோராஷிகின் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார்.








