ஜோகூர் மாநிலத்தில் இனம், மதம், மொழி ஆகிய பின்னணிகளை பாராமல் பங்சார் ஜோகூர் எனும் "ஜோகூர் மக்கள்" சுலோகத்திற்கு அதீத முக்கியத்துவம் அளிப்பதில் முன்னுரிமை வழங்கி வரும் ஆட்சியாளரான மேன்மை தங்கிய ஜோகூர் சுல்தான், சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்காண்டார்,வெளிநாடுகளுக்கு செல்லும் ஒவ்வொரு முறையும், தம்மை ஒரு மலேசியர் என்று முதலில் அறிமுகப்படுத்திக்கொள்வதில் அலாதி பெருமைப் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.
வெளிநாடுகளில் இருக்கும் பட்சத்தில் தம்மை பற்றி யாரும் வினவினால், தாம் எப்போதுமே தம்மை ஒரு மலேசியர் என்றே அடையாளப்படுத்திக்கொள்வதாக ஜோகூர் பாரு அரண்மனையில் சின் சியு டேய்லி சீன நாளிதழுக்கு வழங்கிய சிறப்புப்பேட்டியில் சுல்தான் இப்ராஹிம் இதனை தெரிவித்துள்ளார்.
கடந்த 2010 ஆம் ஆண்டு ஆட்சியாளராக நியமிக்கப்பட்டு, 2015 ஆம் ஆண்டு அரியணையில் அமர்ந்தது முதல் மேன்மைத் தங்கிய ஜோகூர் சுல்தான், மலாய்,ஆங்கில நாளிதழ்கள் மற்றும் மின் ஊடகங்களுக்கு அப்பாற்பட்ட நிலையில் சீனப்பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்த இருப்பது இதுவே முதல் முறையாகும்.

Related News

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்

சுங்கை ரொம்பின் ஆற்றில் கணவன் மனைவி இறந்து கிடந்தனர்

முதியவர் மாடி வீட்டிலிருந்து கீழே விழுந்து மரணம்

ஓரினப்புணர்ச்சி நடவடிக்கை: போலீசார் விதிமுறையை மீறவில்லை

பெட்ரோல் ரோன் 97, 3 காசு உயர்வு


