Oct 16, 2026
Thisaigal NewsYouTube

விபத்தில் தப்பியோடிய அந்த லோரி ஓட்டுநர் பிடிபட்டார்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
விபத்தில் தப்பியோடிய அந்த லோரி ஓட்டுநர் பிடிபட்டார்

கூலாய், டிச. 12-

ஜோகூர், கூலாயில் நேற்று காலை 8.10 மணியளவில் 21 வயது மோட்டார் சைக்கிள் சாலை விபத்தில் உயிரிழந்ததைத் தொடர்ந்து அங்கிருந்து தப்பி ஓடிவிட்ட அந்த விபத்துக்கு காரணமானவர் என்று நம்பப்படும் லோரி ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர்.

ஜாலான் சினாய் – சீலோங் என்ற இடத்தில் நிகழ்ந்த இவ்விபத்து தொடர்பில் சம்பந்தப்பட்ட லோரி ஓட்டுநரை போலீசார் தேடி வந்த நிலையில் 44 வயது மதிக்கத்தக்க அந்த நபர், நேற்று மாலை 7 மணியளவில் பிடிபட்டார் என்று கூலாய் மாவட்ட போக்குவரத்து போலீஸ் பிரிவு தெரிவித்துள்ளது.

அந்த லோரி ஓட்டுநர், திடிரென்று தடம் மாறி, வளைந்ததால், லோரியில் மோதுவதிலிருந்து தவிர்க்க சாலைத் தடுப்பை மோதிய அந்த மோட்டர் சைக்கிளோட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

விபத்தைப் பார்த்ததும், அந்த லோரி ஓட்டுநர் நிற்காமல் தப்பிவிட்டதாக பூர்வாங்க விசாரணையில் தெரியவந்துள்ளது என்று போலீசார் குறிப்பிட்டனர்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →