Dec 30, 2025
Thisaigal NewsYouTube
டிக் டாக் தடை குறித்து போலி செய்தி வெளியிட்ட பெண்ணிடம் எம்சிஎம்சி விசாரணை
தற்போதைய செய்திகள்

டிக் டாக் தடை குறித்து போலி செய்தி வெளியிட்ட பெண்ணிடம் எம்சிஎம்சி விசாரணை

Share:

புத்ராஜெயா, டிசம்பர்.30-

மலேசியாவின் முன்னணித் தொலைக்காட்சியான டிவி3-இன் முத்திரையைப் பயன்படுத்தி, டிக் டாக் செயலி குறித்த போலியான செய்தியை வெளியிட்ட பெண்ணை மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையமான எம்சிஎம்சி விசாரணை செய்து வருகின்றது.

இச்சம்பவம் தொடர்பாக, கெரியான் போலீஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்ட அப்பெண்ணிடம், எம்சிஎம்சி அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

அதே வேளையில், அப்பெண்ணின் கைப்பேசியையும், சிம் கார்டையும் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

டிவி3-இன் முத்திரையையும், காட்சிகளையும் பயன்படுத்தி போலியான செய்தி ஒன்றைத் தயாரித்த அப்பெண், அதில் டிக் டாக் செயலி, மலேசியாவில் தடை செய்யப்படுவதாக, தொடர்புத்துறை அமைச்சர் அறிவிப்பது போலான காட்சிகளைச் சித்தரித்துள்ளார்.

மேலும் அதனை தனது சமூக ஊடகங்களிலும், அப்பெண் பகிர்ந்துள்ளது, முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்நிலையில், தொடர்புத்துறை அமைச்சர், அது போன்ற எந்த ஓர் அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பதையும் எம்சிஎம்சி உறுதிப்படுத்தியுள்ளது.

இந்நிலையில், முத்திரையைத் தவறாகப் பயன்படுத்தி பொதுமக்கள் மத்தியில் தவறான செய்தியைப் பரப்பியதற்காக அப்பெண் விசாரணை செய்யப்பட்டு வருகின்றார்.

Related News