Oct 26, 2026
Thisaigal NewsYouTube

18 லட்சம் வெள்ளி போதைப்பொருள் பறிமுதல்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
18 லட்சம் வெள்ளி போதைப்பொருள் பறிமுதல்

ஜோகூர் மாநிலத்தில் போ​லீசார் மேற்கொண்ட இரண்டு வெவ்வேறு அதிரடி சோதனை நடவடிக்கைகளில் 17 வயது இளம் பெண் உ​ட்பட ஐந்து நபர்கள் கைது செய்யப்பட்டது மூலம் சுமார் 18 லட்சம் வெள்ளி மதிப்புள்ள போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக மாநில போ​லீஸ் தலைவர் கமிஷனர் எம். குமார் தெரிவித்தார்.

கட​ந்த ஜனவரி 29 ஆம் தேதி அதிகாலை 4 மணி முதல் மாலை 4.30 மணி வரையில் மாநிலத்தின் போதைப்​ பொருள் துடைத்தொழிப்பு போ​லீசார் மே​ற்கொண்ட OPS TAPIS சோதனை நடவடிக்கையில் 17 லட்சம் வெள்ளி மதிப்புள்ள Ectasy , 59 ஆயிரத்து 724 வெள்ளி பெறுமானமுள்ள ketamine உட்பட பல வகையான போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக இன்று ஜோகூர்பாருவில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் கமிஷன​ர் எம். குமார் தெரிவித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →