May 22, 2026
Thisaigal NewsYouTube
போதைப்பொருள் கடத்தியதாக மலேசியர் குற்றஞ்சாட்டு
தற்போதைய செய்திகள்

போதைப்பொருள் கடத்தியதாக மலேசியர் குற்றஞ்சாட்டு

Share:

கோலாலம்பூர், மார்ச் 1 -

அயர்லாந்து தலைநகர் டுப்லின் அனைத்துலக விமான நிலையத்தில் 5 லட்சத்து 80 ஆயிரம் ஈரோ அல்லது 30 லட்சம் வெள்ளி மதிப்புள்ள போதைப்பொருளை கடத்தியதாக மலேசியப் பிரஜை ஒருவர், அந்நாட்டு நீதிமன்றத்தில் குற்றச்சாட்டப்பட்டுள்ளார். .

அட்ரியான் மா யிவ் பெங் என்று அடையாளம் கூறப்பட்ட 39 வயதுடைய அந்த மலேசியர், அயர்லாந்தில் பதிவு செய்யப்பட்ட முகவரியை கொண்டிருக்காத நிலையில் கடந்த புதன்கிழமை டுப்லின் அனைத்துலக விமான நிலையத்தில் கனாபிஸ் வகையைச் சேர்ந்த போதைப்பொருளை கடத்தியதாக கைது செய்யப்பட்டு, பால்யிம் கார்டா போலீஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

வர்ததக நோக்கில் பெரியளவில் அந்த மலேசியர், போதைப்பொருளை கடத்தி வந்துள்ளார் என்று டுப்லின் மாவட்ட நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு, அவருக்கு எதிரான குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.

அயர்லாந்து நாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ள மிகப்பெரிய அளவிலான போதைப்பொருள் அளவு என்பதால் அந்த மலேசியருக்கு நீதிமன்றம் ஜாமீன் அனுமதிக்கக்கூடாது என்று அமலாக்க அதிகாரி பீட்டர் இலியோட் நீதிமன்றத்தை கேட்டுக்கொண்டார்.

Related News