Sep 29, 2026
Thisaigal NewsYouTube
அரசு தரப்பில் தாமதம் - சரவணன் வழக்கு நவம்பர் 3-ஆம் தேதிக்கு ஒத்தி வைப்பு
தற்போதைய செய்திகள்

அரசு தரப்பில் தாமதம் - சரவணன் வழக்கு நவம்பர் 3-ஆம் தேதிக்கு ஒத்தி வைப்பு

Share:

நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் நிறுவனம் ஒன்றிற்கு 1,000 வெளிநாட்டுத் தொழிலாளர் ஒதுக்கீட்டை அங்கீகரித்தது தொடர்பாக சுமார் 10 லட்சத்து 97 ஆயிரம் ரிங்கிட் கையூட்டு பெற்றதாக, முன்னாள் மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ எம்.சரவணன் மீது சுமத்தப்பட்ட மூன்று லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளின் மேல் விசாரணை வரும் நவம்பர் 3-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இன்று காலை கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நீதிபதி அஸ்ருல் தாரஸ் முன்னிலையில் நடைபெற்ற இந்த வழக்கு விசாரணைக்குப் பிறகு, நவம்பர் 3-ஆம் தேதியானது நிர்ணயிக்கப்பட்டது.

இதனிடையே, விசாரணைக்குப் பின்னர் நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த டத்தோ ஸ்ரீ எம்.சரவணன், தமக்கு எதிரான வழக்கை எதிர்கொள்ளத் தயாராக இருந்த போதிலும், அரசு தரப்பு தயாராக இல்லை என்பதால் வழக்கானது ஒத்தி வைக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

மேலும், இந்த வழக்கு விசாரணைத் தேதியை உடனடியாக நிர்ணயிக்க வேண்டும் என்றும் சரவணன் வலியுறுத்தினார்.

இதனிடையே, இந்த வழக்கில் சரவணன் சார்பில் அவரது வழக்கறிஞர்கள் டத்தோ கீதன் ராம் வின்சண்ட், லவினியா ராஜா ஆகியோர் ஆஜராகினர்.

அதேவேளையில், அரசுத் தரப்பில் அரசு தரப்பு துணை வழக்கறிஞர் பி. ரூபினி ஆஜரானார்.

Related News