நெகிரி செம்பிலான், கோலாக் கிளாவாங், முக சவுக் என்ற இடத்திற்கு அருகில் உள்ள வனப்பகுதியில் வேட்டையாடிக் கொண்டிருந்தபோது மான் என நினைத்து, தமது நண்பரை சுட்டுக்கொன்ற ஆடவருக்கு எதிரான தடுப்புக் காவல், மேலும் 7 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
குற்றவியல் சட்டத்தின் கீழ் விசாரணை செய்யப்பட்டு வரும் 52 வயதுடைய அந்த நபருக்கு எதிரான தடுப்புக் காவல், வரும் மே 7 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஜெலெபு மாவாட்ட போலீஸ் தலைவர், துணை சுபரித்தென்டன்மஸ்லான் உடின் தெரிவித்தார்.
கடந்த ஏப்ரல் 24 ஆம் தேதி அதிகாலை 5 மணியளவில், முக சவுக்கில் உள்ள ஒரு வனப்பகுதிக்கு வேட்டையாடச் சென்ற போது உள்ளூரில் தயாரிக்கப்பட்டது என்று நம்பப்படும் துப்பாக்கி ஒன்றை பயன்படுத்தி, 61 வயதுடைய ஆடவரை அந்நபர் சுட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது என்று மஸ்லான் உடின் குறிப்பிட்டார்.

Related News

மளிகைக்கடையில் கொள்ளையிட்டதாக போலீஸ்காரர் மீது குற்றச்சாட்டு

இன்னும் வேறு என்ன செய்யச் சொல்கிறீர்கள்? பிரதமர் அன்வார் கேள்வி

தமிழ்ப்பள்ளிகளில் திருவள்ளுவர் சிலையை அகற்ற உத்தரவிடப்பட்டதா? ஜோகூர் கல்வி இலாகா மறுப்பு

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு


