Oct 18, 2026
Thisaigal NewsYouTube

மாணவன் ஒருவன் பள்ளி வளாகத்தில் உயிரிழந்தான்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மாணவன் ஒருவன் பள்ளி வளாகத்தில் உயிரிழந்தான்

கோலாலம்பூர், அக்டோபர் 02-

கோலாலம்பூரில் உள்ள பள்ளி ஒன்றின் வளாகத்தில் மாணவன் ஒருவன், உயிரிழந்ததை அப்பள்ளி நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் நேற்று மாலையில் நிகழ்ந்தது என்ற Kuen Cheng உயர்நிலைப்பள்ளியின் முதல்வது அலுவலகம் உறுதிப்படுத்தியது.

அந்த மாணவனுக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதிலும் அவர் இழந்து விட்டதாக உறுதி செய்யப்பட்டது.

மாணவனின் இறப்பைத் தொடர்ந்து அவனது குடும்பத்திற்கு பள்ளி நிர்வாகம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொண்டது.

மாணவர்களின் மன அழுத்தத்தைக் குறைப்பதற்கு அவர்களின் நல்வாழ்வை பாதுகாப்பதில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளி நிர்வாகம் உறுதி அளித்துள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →