புத்ராஜெயா, அக்டோபர்.06-
வரும் 47 ஆவது ஆசியான் உச்ச நிலை மாநாட்டை முன்னிட்டு அக்டோபர் 27 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை இரண்டு தினங்களுக்கு சிலாங்கூர் மற்றும் கோலாலம்பூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 72 பள்ளிகளில் இயங்கலை மூலம் மாணவர்களுக்குப் பாடம் நடத்தப்படும் என்று கல்வி அமைச்சர் ஃபாட்லீனா சீடேக் தெரிவித்துள்ளார்.
72 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களும், ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டியதில்லை. மாறாக, வீட்டிலிருந்து PdPR எனப்படும் இயங்கலை வகுப்புகள் நடத்தப்படுவதற்கு அவனம் செய்யப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
மாநாட்டை முன்னிட்டு உலகத் தலைவர்களின் வருகையினால் பல்வேறு சாலைகள் மூடப்படும் பட்சத்தில் சாலை போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடிய சாத்தியம் ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அப்பகுதிகளில் உள்ள பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு இயங்கலை வகுப்புகள் நடத்தப்படும் என்று ஃபாட்லீனா சீடேக் தெரிவித்தார்.








