Dec 4, 2025
Thisaigal NewsYouTube
ஓட்டுநர் பயிற்சி ஆசிரியருக்கு நேர்ந்த கதி: காரை அடித்து நொறுக்கித் தலையில் குத்திய மோட்டார் சைக்கிளோட்டி
தற்போதைய செய்திகள்

ஓட்டுநர் பயிற்சி ஆசிரியருக்கு நேர்ந்த கதி: காரை அடித்து நொறுக்கித் தலையில் குத்திய மோட்டார் சைக்கிளோட்டி

Share:

பத்து பஹாட், ஆகஸ்ட்.13-

ஜோகூர், பத்து பஹாட்டில், 56 வயதுடைய கார் ஓட்டுநர் பயிற்சி ஆசிரியர் ஒருவரை மோட்டார் சைக்கிளோட்டி ஒருவர் தாக்கிக் காயப்படுத்தியுள்ளார். தவறான ஓட்டுநர் முறை காரணமாக ஏற்பட்ட வாக்குவாதம், மோதலில் முடிந்ததாகவும், இதில் சினமுற்ற மோட்டார் சைக்கிளோட்டி காரின் கண்ணாடியை உடைத்து ஓட்டுநரைத் தாக்கியதாகவும் பத்து பஹாட் மாவட்டக் காவல்துறைத் தலைவர் அசிஸ்டன் கமிஷனர் ஷாருலனுவார் முஷாடாட் அப்துல்லா சானி தெரிவித்துள்ளார்.

காயங்களுடன் கார் ஓட்டுநர் தள்ளாடும் காணொளி சமூக வலைத்தளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவம் தொடர்பாக 33 வயது மதிக்கத்தக்க மோட்டார் சைக்கிளோட்டி கைது செய்யப்பட்டு, சேதத்தை ஏற்படுத்தியதற்கான குற்றவியல் சட்டம் பிரிவு 323, பிரிவு 427இன் கீழ் விசாரணை நடைபெறுகிறது.

Related News