May 6, 2026
Thisaigal NewsYouTube
பண மோசடிக்கு பயன்படுத்தப்படும் 10 நிறுவனங்கள்: பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு காவற்படை எச்சரிக்கை!
தற்போதைய செய்திகள்

பண மோசடிக்கு பயன்படுத்தப்படும் 10 நிறுவனங்கள்: பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு காவற்படை எச்சரிக்கை!

Share:

கோலாலம்பூர், ஜனவரி.25-

கடந்த ஜனவரி 15-ஆம் தேதி வரையிலான ஒரே மாதத்தில் மட்டும், 10 நிறுவனங்கள் தங்களின் வங்கிக் கணக்குகளைப் பண மோசடி நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தியது தொடர்பாக 111 புகார்கள் பெறப்பட்டுள்ளதாகப் புக்கிட் அமான் வணிகக் குற்றப் புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளது. சமூக ஊடகங்களில் குறுகிய காலத்தில் அதிக ஆதாயம் தருவதாகக் கூறி வரும் விளம்பரங்களை எளிதில் நம்ப வேண்டாம் என்றும், குறிப்பாகச் சம்பந்தமில்லாத நிறுவனங்கள் அல்லது தனிநபர்களின் கணக்குகளுக்குப் பணத்தைப் பரிமாற்றம் செய்ய வேண்டாம் என்றும் டத்தோ ருஸ்டி முஹமட் இசா எச்சரித்துள்ளார்.

முறையாகப் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களாக இருந்தாலும், அவை மோசடி கும்பல்களின் 'வாடகை வங்கிக் கணக்குகளாக' பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளதால், முதலீடு செய்வதற்கு முன் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படுவது அவசியமாகும். பொதுமக்கள் ஏதேனும் பணப் பரிமாற்றங்களைச் செய்வதற்கு முன்னதாக, சம்பந்தப்பட்ட தொலைபேசி எண்கள் அல்லது வங்கிக் கணக்குகளின் நம்பகத்தன்மையை 'Semakmule' அகப்பக்கம் வழியாகச் சரி பார்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Related News

டாமான்சாரா பெர்டானாவில் இரண்டு கத்திகளுடன் அட்டகாசம் செய்த ஆடவர் கைது

டாமான்சாரா பெர்டானாவில் இரண்டு கத்திகளுடன் அட்டகாசம் செய்த ஆடவர் கைது

ரஃபிஸி ரம்லியிடம் 7 மணி நேரங்கள் தொடர் விசாரணை - நாளை மீண்டும் விசாரணை தொடரும்

ரஃபிஸி ரம்லியிடம் 7 மணி நேரங்கள் தொடர் விசாரணை - நாளை மீண்டும் விசாரணை தொடரும்

உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்குத் துறையின் புதிய இயக்குநராக யுஸ்ரி ஹசான் பஸ்ரி நியமனம்

உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்குத் துறையின் புதிய இயக்குநராக யுஸ்ரி ஹசான் பஸ்ரி நியமனம்

கூலிம் கிளப்பில் கைகலப்பு: பாடாங் செராய் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆயுதத்துடன் மிரட்டிய குற்றத்திற்காகக் கைது!

கூலிம் கிளப்பில் கைகலப்பு: பாடாங் செராய் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆயுதத்துடன் மிரட்டிய குற்றத்திற்காகக் கைது!

அட்டர்னி ஜெனரல் - அரசு தரப்பு வழக்கறிஞர் பதவிகளை பிரிக்கும் மசோதா: மே 18-க்குள் முடிவு

அட்டர்னி ஜெனரல் - அரசு தரப்பு வழக்கறிஞர் பதவிகளை பிரிக்கும் மசோதா: மே 18-க்குள் முடிவு

மற்றவர்களின் மைகாட்களைப் பயன்படுத்திய வங்காள தேச நாட்டவருக்கு 10 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

மற்றவர்களின் மைகாட்களைப் பயன்படுத்திய வங்காள தேச நாட்டவருக்கு 10 ஆயிரம் ரிங்கிட் அபராதம்