Jul 31, 2026
Thisaigal NewsYouTube
சாயம் வீசிய இருவருக்கு தலா 2,500 வெள்ளி அபராதம்
தற்போதைய செய்திகள்

சாயம் வீசிய இருவருக்கு தலா 2,500 வெள்ளி அபராதம்

Share:

போர்ட் டிக்சன், தாமான் ஃப்லோரா கம்போங் பாயாவில் உள்ள ஒரு வீட்டில் சிவப்பு சாயம் வீசியக் குற்றத்திற்காக, இருவருக்கு இங்குள்ள மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தலா 2 ஆயிரத்து 500 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது.

36 வயது யொங் வாய் கீ, 33 வயது சான் வாய் ஹொங் ஆகிய இருவரும் இக்குற்றத்தை கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் புரிந்ததாக மஜிஸ்ட்ரெட் உத்மான் அப்துல் கானி ஒப்புக் கொண்டுள்ளனர்.

அந்த அபராதத் தொகையைச் செலுத்தத் தவறினால், 2 மாதங்கள் சிறை தண்டனையை அவர்கள் அனுபவிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

Related News